கோயில் திரிசூலத்தைக் காலால் மிதித்த ஆடவரைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் போராட்டம்!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 9,

கோயிலிருக்கும் இந்து மத சமயச் சின்னமான திரிசூலத்தைக் காலால் மிதிக்கும் ஆடவருக்கு எதிராக HINDU TASK FORCE தன்னார்வ அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளநர். கோயில்களை இடிப்பதற்காக சமூக வலைத்தலங்களின் மூலமாக நிதியைத் திரட்டிய TAMIM DAHRI திரிசூலத்தைக் காலால் மிதித்து எட்டி உதைக்கும்படியானக் காணொலியைப் பதிவேற்றம் செய்ததைத் தொடர்ந்து இந்திய மக்களிடையே அதிருப்தியைக் கிளப்பியுள்ளது. தாமிம் டாஹரியின் இந்த செயலை எதிர்த்து இன்று இரவு செந்தூல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவிருப்பதாகவும் நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் வாசலில் போராட்டம் நடத்தவிருப்பதாகவும் புரட்சி இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இப்படியொரு இழிவான செயலைச் செய்திருக்கும் TAMIM DAHRI எனும் ஆடவரைக் காவல்துறை கைது செய்ய வேண்டும் என பி.கே.ஆரின் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரான Gunaraj George வலியுறுத்தியுள்ளார். TAMIM DAHRI க்குச் சம்மந்தம் இல்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம் என Gunaraj George அறிவுருத்தினார். தற்போது திரிசூலத்தைக் காலால் மிதித்து தமீம் டஹாரி வெளியிட்டிருக்கும் காணொலி சமூக வலைத்தலங்களில் பரவி வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *