கோயிலை இடிக்க யாருக்கும் உரிமையில்லை! அரசு தீர்வுக்காணும்! – சட்டத்துறை அமைச்சர்!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 16,

அரசு அல்லது தனியார் நிலங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருக்கும் கோயிலையோ அல்லது தனிப்பட்ட கூடாரங்களையோ இடிக்க எந்தவொரு தனிநபருக்கும் உரிமையில்லை என்பதை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும் என பிரதமர் துறையின் சட்ட நிர்வாகச் சீர்த்த்திருத்த அமைச்சர் Datuk Seri Azalina Othman Said வலியுறுத்தினார். அரசு பதிவேடுகளில் இல்லாத கோயில்கள் சட்டவிரோதமானவை என வகைப்படுத்த முடியாது. ஒரு சில தரவுகளையும் உரிமைகளையும் கோயில் நிர்வாகம் கொண்டிருக்கவில்லை என்றால் அது சட்டவிரோதக் கோயில் என வகைப்படுத்த கூடாது என Datuk Seri Azalina Othman Said தெரிவித்தார். 

நில உரிமையாளர்களின் நடவடிக்கையால் இந்த பிரச்சனை இன ரீதியிலானத் தாக்குதலாகவோ பழிவாங்கும் செயலாகவோ கருதப்படுகிறது. இந்த சர்ச்சைக்குப் பின்னணியில் அரசாங்கத்தின் பதிவுகளும் முக்கிய காரணம் என்பதால் எந்தவொரு தனி நபருக்கும் கட்டுமானங்களை இடிக்கவோ தகர்க்கவோ உரிமம் இல்லை என்றும் அரசு தரப்பின் இலாகாவின் மூலமாக இந்த நில ஆக்கிரமிப்புப் பிரச்சனைகளைக் கையாள வேண்டும் என்றும் Datuk Seri Azalina Othman Said வலியுறுத்தினார். 

நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கோயிலுக்கும் நிலத்தின் உரிமையாளருக்குமான இந்த சிக்கலில் எந்தவொரு தனிநபரோ, அரசு சாரா இயக்கங்களோ கருத்து தெரிவிக்கவோ கூட்டணி அமைக்கவோ வேண்டாம். அதற்கு பதிலாக அரசு அலுவலகங்களை நாடுங்கள். அரசு அதிகாரிகள் முழுமையான ஆய்வுக்குப் பின்னர் நடவடிக்கை எடுப்பார்கள். சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய மக்கள் சட்டத்தைக் கையிலெடுக்க வேண்டாம் என பிரதமர் துறையின் சட்ட நிர்வாகச் சீர்த்த்திருத்த அமைச்சர் Datuk Seri Azalina Othman Said தெரிவித்தர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

K.V.Nathan

முதலில் சமய வழிபாட்டு தளங்களை ஆராய்ந்து கையால சிறப்பு அதிகாரிகளை நியமிப்பது அவசியம்.அவர்கள் தத்தம் சமயத்தை சார்ந்தவராக இருப்பது சிறப்பு. ஆய்வின் முடிவுகளை சம்பந்த அரசு இலாவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.பிறகு மத்திய அரசு மாநில அரசுடன் கலந்தாலோசித்து உத்திரவு பிறப்பித்து தீர்வு காண வேண்டும்.