கோயில் விவகாரத்தில் அன்வார் அரசியல் செய்கிறார்! பக்காத்தானுக்குப் பிரச்சனை! RAFIZI கருத்து!
- Thinagaren Sanggaren
- 16 Feb, 2026
பிப்ரவரி 16,
தற்போது கோயில் விவகாரங்கள் தேசிய பிரச்சனையாக உருவாகியதற்குப் பிரதமர் அன்வாரும் ஒரு முக்கிய காரணம் என பி.கே.ஆர் முன்னாள் துணைத் தலைவர் Datuk Seri Rafizi Ramli தெரிவித்துள்ளார். இப்போது அன்வாருக்கு யாருக்குச் சாதகமாக இருப்பார்? மலாய்க்காரர்களுக்கா? அல்லது மலாய்க்காரர் அல்லாதவருக்கா? இருவருக்கும் சாதகமாக அன்வார் இருக்க வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டிருப்பதாக Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.
கடந்த காலங்களில் கோயில்கள் குறித்தான பிரச்சனைகள் எழுந்த போது அது இரு சமூகத்திற்கு இடையிலான பிரச்சனையாக இல்லாமல், கட்டுமான நிறுவனத்திற்கும் கோயில் நிர்வாகத்திற்குமானப் பிரச்சனையாக மட்டுமே இருந்தது. அப்போதைய அரசாங்கம் சரியாக அந்த பிரச்சனையைக் கையாளவில்லை என்பதால் அது பெரிய பிரச்சனையாக்கப்பட்டு போராட்டங்கள் வலுத்தன. ஆனால் இப்போது குறிப்பிட்ட இஸ்லாமிய அமைப்புகள் கோயில்களுக்கு எதிராகப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
முதல் நாள் கோயில்களுக்கு எதிராகப் போராடும் கூட்டத்தை அடக்க வேண்டும் என பேசிய பிரதமர் அன்வார் மறுநாள் அரசு அதிகாரிகள் சட்டவிரோதக் கோயில்கள் இருக்கும் இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும் என பேசினார். முதல் நாள் அன்வார் கோயிலுக்கு எதிராகப் போராடும் கூட்டத்திற்கு எதிர்ப்பாகப் பேசியது இஸ்லாம் அல்லாத மக்களுக்கு அன்வாரின் மீது நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் மலாய்க்காரர்களுக்கு அன்வாரின் மீது கோபம் வந்தது. ஆனால் மறுநாளே அன்வார் கோயில்களைச் சுத்தம் செய்ய வேண்டும் என பேசியதும் முதல் நாள் நம்பிய மலாய்க்காரர் அல்லாதவர்களே அன்வாரை விமர்சித்தனர்.
அன்வாரின் இந்த இரட்டை நிலைப்பாடு அரசியல் நோக்கமுடையதாகவே தாம் கருதுவதாகவும் கட்சியின் தலைவராகவும் அரசியல்வாதியாகவும் இதை அன்வார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார். இப்போது எழுந்திருக்கும் இந்து கோயில் சர்ச்சையால் கோயில்களைப் பராமரிக்கவும் அதன் பிரச்சனைகளைத் தீர்க்க முழுமையான தீர்வு அமைக்கப்பட்டால் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிக்கு ஆபத்து இல்லை. ஆனால் அதைக் கடந்த கால அரசியல்வாதிகள் போல மெத்தனமாக இருந்துவிட்டால் விளைவு தேர்தலில் எதிரொளிக்கும் என Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
K.V.Nathan
அரசியல் ஒரு சாக்கடை.அதில் ஒவ்வொரு தடவையும் நம்பி ஏமாறுவது நம் இந்திய சமுகமே



