விபத்தில் இளம்பெண் பலி! கணவர் படுகாயம்!
- Thinagaren Sanggaren
- 28 Dec, 2025
டிசம்பர் 28,
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளம்பெண் உயிரிழந்ததுடன் அவரின் கணவர் படுகாயம் அடைந்தார். ஜொகூரிலிருந்து ஆயேர் ஹீத்தாம் செல்லும் சாலையில் காலை 9.15 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார். கூலாயிலிருந்து மோட்டார் சைக்கிளில் பொருள்களை டெலிவரி செய்வதற்காக 41 வயது ஆடவர் தன் 23 வயது மனைவியுடன் ஆயேர் ஹீத்தாம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார்.
41 வயது மோட்டார் சைக்கிளோட்டி கட்டுப்பாட்டை
இழந்து சாலை தடுப்புச் சுவரை மோதி எதிர் திசையில் வந்துக் கொண்டிருந்த வாகனத்தையும்
லாரியையும் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்திலேயே 23
வயது இளம் பெண் உயிரிழந்ததாகவும் 41 வயது ஆடவர்
படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிகிச்சைக்குப் பின்னர் மேலதிக விசாரணைகளைத் தொடர்வதாகக் கூலாய் மாவட்டக்
காவல் ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



