முருகன் கோயில் உடைப்பு! ம.இ.கா & டி.ஏ.பி மெளனம்! பெரிக்காத்தான் கேள்வி! KULAI MURUGAN TEMPLE!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 20,

ஜொகூர் KANGKAR PULAI மலை மீதிருந்த முருகன் கோயில் நகராண்மைக் கழகத்தால் இடிப்பட்டது இந்தியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013 முதல் பதிவு செய்யப்பட்ட கோயிலாக அது இருந்தாலும் கோயில் அமைந்திருக்கும் நிலம் கோயிலுக்குச் சொந்தமானது இல்லை என கடந்த நவம்பர் மாதம் ஒரு முகநூல் பதிவு சமூகவலைத்தலங்களில் பரவியது. அதன் தொடர்ச்சியாகக் கூலாய் நகராண்மைக் கழகத்தில் புகார் அளிக்கப்பட்டதும் கடந்த டிசம்பர் 17 மலையாளும் முருகன் எனப்படும் கோயில் நகராண்மைக் கழகத்தினரால் உடைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே கோயிலை உடைக்கும் வரையில் ஜொகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இருக்கும் ம.இ.காவின் ரவீந்திரன் அமைதியாக இருந்தது ஏன் என பெரிக்காத்தானின் கூலாய் தொகுதி மலாய்க்காரர் அல்லாதவர்களின் தலைவரான சந்திர சேகரன் கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி ஜொகூர் மாநில டி.ஏ.பி தலைவராகவும் துணை அமைச்சராகவும் இருக்கும் தியோ நீ செங்கின் சொந்த நாடாளுமன்றத்தில் இச்சம்பவம் நிகழ்ந்திருந்தாலும் டி.ஏ.பியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என சந்திர சேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையில் கடந்த வாரம் நகராண்மைக் கழகம் சம்மந்தப்பட்ட நிலத்திலிருந்து கோயிலை அகற்ற டிசம்பர் 31 வரையில் அவகாசம் வழங்கியதாகக் கோயில் நிர்வாகத் தலைவர் N. Parameswara Rao தெரிவித்தார். ஆகையால் டிசம்பர் 31 வரையில் அந்த கோயில் அங்கேயே இருக்கும் என்றும் வாக்குறுதிகளிக்கப்பட்டதாகவும் 15 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15 டிசம்பர் மாநில அரசின் பொது விடுமுறையின் போது கூலாய் நகராண்மைக் கழகம் கோயிலை இடித்திருப்பதாக N. Parameswara Rao தெரிவித்துள்ளார். இந்த கோயில் சுமார் 24 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் இருந்து வருவதாகவும் N. Parameswara Rao குறிப்பிட்டுள்ளார்.

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *