கூலாய் முருகன் கோயில் உடைப்பு வருத்தமளிக்கிறது! ஜொகூர் ம.இ.கா ரவீன் வருத்தம்!
- Thinagaren Sanggaren
- 21 Dec, 2025
டிசம்பர் 21,
ஜொகூர் கங்கார் புலாயில் உள்ள மலையாளும் முருகன் கோயில் நகராண்மைக் கழகத்தால் உடைக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கும் வகையில் உள்ளதாக ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் தெங்காரோ சட்டமன்ற உறுப்பினருமான ம.இ.காவின் RAVEN KUMAR KRISHNASAMY அறிக்கை வெளியிட்டுள்ளார். சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கோயிலுக்கு எதிராக நகராண்மைக் கழகம் நடவடிக்கை எடுத்திருப்பதில் தாம் எந்தவோர் அதிருப்தியையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும் கோயிலுக்குள் இருக்கும் இந்துக்களின் நம்பிக்கையான சிலையை முறையாக அகற்றி வைத்து நகராண்மைக் கழகம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என RAVEN KUMAR KRISHNASAMY தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாகக் குளுவாங் துர்கை அம்மன் கோயிலிலும் கெம்பாஸ் மகா காளியம்மன் ஆலயத்திலும் நகராண்மைக் கழகம் நடவடிக்கை எடுக்கும் போது சிலைகளை முறையாக அப்புறப்படுத்திய பின்னரே இடத்தைக் காலி செய்ததாக RAVEN KUMAR KRISHNASAMY சுட்டிக்காட்டினார். கோயிலுக்கு எதிராக நகராண்மைக் கழகத்தினர் எடுத்திருக்கும் நடவடிக்கை சட்டப்படி முறையாக இருந்தாலும் இனி ஜொகூரில் உள்ள கோயில்களுக்கு எதிரான எந்தவொரு சட்டநடவடிக்கையும் ஜொகூர் மாநில அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு அதன் பின்னர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஜொகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் RAVEN KUMAR KRISHNASAMY வலியுறுத்தினார்.
ஜொகூர் கங்கார் புலாயில் உள்ள மலையாளும் முருகன் கோயில் நகராண்மைக்
கழகத்தால் உடைக்கப்பட்டிருக்கும் விவகாரம் குறித்தும் அதன் முழுமையான விசாரணை அறிக்கையும்
அடுத்து நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் குரல் எழுப்புவதாகவும்
சுமூகமான ஒரு தீர்வைக் காணவிருப்பதாகவும் ஜொகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் RAVEN
KUMAR KRISHNASAMY நம்பிக்கை அளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



