முருகன் கோயில் உடைக்கப்பட்டதற்கு ம.இ.கா & அம்னோ பொறுப்பேற்க வேண்டும்! – ஜொகூர் டி.ஏ.பி பதிலடி!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 20,

கங்கார் புலாயில் உள்ள மலையாளும் முருகன் கோயில் உடைக்கப்பட்ட விவகாரத்தில் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜொகூர் மாநில டி.ஏ.பி தலைவருமான Teo Nie Ching எந்த வகையிலும் சம்மந்தப்படவில்லை என்றும் மாறாக ஜொகூர் மாநில அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டை முன்வைக்கும்படியும் ஜொகூர் மாநில டி.ஏ.பி கட்சியின் துணைச் செயலாளர் Kartiyaini Jeyapalan பதிலளித்துள்ளார். நகராண்மைக் கழகம் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் மாநில அரசு அம்னோவிடமும் ம.இ.காவிடமும் இருப்பதை அவர் சுட்டிகாட்டினார்.

இந்த விவகாரத்தில் டி.ஏ.பி எந்தவோர் அரசியல் ரீதியாகவும் பழிசுமத்தாமல் சமய வழிபாட்டுத் தலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக ஜொகூர் மாநில டி.ஏ.பியின் துணைச் செயலாளர் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்த கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் விரும்பவில்லை என்றாலும் பாதிக்கப்பட்டிருக்கும் கோயிலுக்கு முறையான நீதி வழங்கவும் நாங்கள் நடவடிக்கையை மேற்கொள்வோம் என ஜொகூர் மாநில டி.ஏ.பியின் துணைச் செயலாளர் தெரிவித்தார். 


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *