கூலிமில் மகளைக் கொன்று தூக்கிலிட்டு தற்கொலை செய்த இளம் தாய்!
- Thinagaren Sanggaren
- 05 Nov, 2025
நவம்பர் 5,
கெடா கூலிம் தாமான் பேராக்கில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 30 வயது பெண்ணின் சடலமும் 4 வயது சிறுமியின் சடலமும் மீட்கப்பட்டது. இரவு 11 மணிக்கு வீட்டிலுள்ள 7 வயது சிறுவன் அலறியதாக அண்டை வீட்டாரிடமிருந்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூலிம் மாவட்டக் காவல் ஆணையர் Zulkifli Azizan தெரிவித்தார். வீட்டிலுள்ள காற்றாடியில் தற்கொலையிட்ட 30 வயது உடலையும் படுக்கையிலிருந்த 4 வயது சிறுமியின் உடலையும் பிரேதப் பரிசோதனைக்காகக் கூலிம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக Zulkifli Azizan தெரிவித்தார்.
வீட்டின் மேசையில்
தற்கொலை செய்து கொண்ட 30 வயது இளம் பெண் தனது தற்கொலை வாக்குமூலத்தை எழுதியிருப்பதாகவும்
மன உளைச்சல் காரணமாகத் தாம் தற்கொலை செய்துக் கொள்வதாகவும் எல்லோரும் தன்னை மன்னிக்கவுமென
கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூலிம் மாவட்டக் காவல் ஆணையர் Zulkifli Azizan தெரிவித்தார். 4 வயது சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்திருப்பதாகவும்
7 சிறுவனின் கழுத்தில் கீறல்களும் காயங்களும் இருப்பதால்
அச்சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



