போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் கைது! – தலைநகர்

top-news

ஜூலை 6,


தலைநகர் புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்த 5 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யபட்டனர். இன்று காலை 9.19 மணிக்குத் தேசிய குடிநுழைவுத் துறை புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் புத்ராஜெயாவில் மேற்கொண்ட சோதனையில் அவர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து பல நாட்டு பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தேசிய குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார். சம்மந்தப்பட்ட கும்பல் கடந்த வாரத்தில் முதியவர்களிடம் போலி பாஸ்போர்ட்கள் குறித்து பரப்புரை செய்யும் போது கண்டறியப்பட்டதாகவும் அவர்களைக் கண்காணித்து வந்த அதிகாரிகள் இன்று போலி பாஸ்போர்ட்டுகளுடன் அவர்களைக் கைது செய்ததாக Datuk Zakaria Shaaban தெரிவித்தார். 


கைது செய்யப்பட்ட ஐவரும் 30 முதல் 66 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் அவர்களிடமிருந்து 6 மலேசியா பாஸ்போர்ட்டுகள், 22 சீனா நாட்டுப் பாஸ்போர்ட்டுகள், 7 BANGLADESH பாஸ்போர்ட்டுகள், 3 இந்தோனேசிய பாஸ்போர்ட்கள் வியாட்னாம், மியான்மார் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளுடன் மடிக்கணினி, 2 வாகனங்கள், கைப்பை, அச்சுப்பொறியுடன் RM3,070 ரொக்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தேசிய குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.


Lima lelaki tempatan berusia 30 hingga 66 tahun ditahan di Putrajaya kerana disyaki menghasilkan pasport palsu. Pihak Imigresen merampas 38 pasport pelbagai negara, komputer riba, mesin cetak, kenderaan dan wang tunai RM3,070 dalam serbuan tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *