புதிய வரலாறு பாடத்திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமல்

top-news

கோலாலம்பூர், பிப். 11-

 வரலாறு (Sejarah) பாடத்திற்கான புதிய பாடத்திட்டம் அடுத்த ஆண்டு முதல் தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளிகளில் அமல்படுத்தப்படும் என்று கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் ஆண்டு ஒன்று (Tahun Satu) மற்றும் படிவம் ஒன்று (Tingkatan Satu) மாணவர்களுக்கு மட்டும் நடைமுறைக்கு வரும் என்றும், பின்னர் இது கட்டங்களாக விரிவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக 2028ஆம் ஆண்டு, புதிய வரலாறு பாடத்திட்டம் படிவம் இரண்டு (Tingkatan Dua) மற்றும் ஆண்டு இரண்டு (Tahun Dua) மாணவர்களுக்கும் செயல்படுத்தப்படும் என விளக்கினார்.

இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தின் வாய் வழி கேள்வி-பதில் அமர்வில் பேசிய அவர், தற்போதுள்ள கல்வி அமைச்சின் (KPM) பாடத்திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தப்படும் என்றும், காலத்திற்கேற்ப தேவைகள் மாறும்போது புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம் என்றும் தெரிவித்தார்.

மாணவர்களின் புரிதல், கற்றல் தரம் மற்றும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் வரலாறு பாடத்தின் உள்ளடக்கம் மேம்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *