பதவி விலகிய KUSKOP அமைச்சர்! சபாவின் வளங்கள் சபா மக்களுக்கே!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 9, 

எதிர்வரும் டிசம்பர் மீண்டுமொரு அமைச்சரவை மாற்றம் நிகழ்த்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர்கள் கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது தொழில்முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவுக் கழக அமைச்சர் Datuk Ewon Benedick தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்டத்துறையுடன் ஏற்பட்ட முரண் காரணமாக அவர் தனது அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் தனது ராஜினாமா கடிதத்தைப் பிரதமர் அன்வாருக்கு அனுப்பியிருப்பதாகவும் Datuk Ewon Benedick தெரிவித்துள்ளார். 

சபா மாநிலத்தின் வருவாய் சபா மாநிலத்தவருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் அமைதல் வேண்டும் என்கிற தனது UPKO கட்சியின் கொள்கைக்கு முரணாக நீதித்துறை நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் தாம் ராஜினாமா செய்வதாக UPKO கட்சியின் தலைவரும் தொழில்முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவுக் கழக அமைச்சருமான Datuk Ewon Benedick. சபா மாநிலம் மலேசியாவுடன் இணைந்த 1963 கூட்டாட்சி ஒப்பந்தத்தில் சபா மாநிலத்தின் வளங்கள் தொடர்பான விதிகளை நீதித்துறை மீறுவதைத் தாமும் தமது கட்சியினரும் கடுமையாக எதிர்ப்பதாகவும் இது சபா மக்களின் வாழ்வாதாரத்தை அதிகமாகப் பாதிக்கும் என்றும் Datuk Ewon Benedick தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *