RM 2 லட்சம் மதிப்பிலானக் கடத்தல் மதுபானங்கள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 22,

சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கடத்த முயன்ற 540 மதுபானப் பெட்டிகளைக் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. நேற்றிரவு 8 மணியளவில் லாபூவான் கடல் பகுதியில் சந்தேகத்திற்குரிய படகை ரோந்து பணியிலிருந்த கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டதாகவும் சம்மந்தப்பட்ட படகிலிருந்தவர்கள் தப்பிக்க முயற்சித்து படகை லாபுவான் தீவில் கைவிட்டு விட்டு தீவுக்குள் தப்பியதாகவும் லாபுவான் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் கேப்டன் Izwanhadi Idros தெரிவித்தார். 

கைவிடப்பட்ட படகிலிருந்து 540 மதுபானப்பெட்டிகளைப் பறிமுதல் செய்ததாகவும் அதன் மதிப்பு சுமார் RM 2 லட்சம் ரிங்கிட் என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் லாபுவான் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் கேப்டன் Izwanhadi Idros தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட மதிபானப் பெட்டிகள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும் சட்டவிரோதமாக மலேசியாவில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டவை என்றும் லாபுவான் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் கேப்டன் Izwanhadi Idros தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *