விபத்தை ஏற்படுத்தி நிறுத்தாமல் சென்ற ஆடவருக்கு 30 நாள்கள் சிறையும் அபராதமும்!

- Sangeetha K Loganathan
- 13 May, 2025
மே 13,
தலைநகரில் உள்ள JALAN DUTA சாலையில் மோட்டார் சைக்கிளை மோதி நிறுத்தாமல் சென்ற Nissan Navara வாகனமோட்டிக் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவருக்கு கோலாலம்பூர் Majistret நீதிமன்றம் 30 நாள்கள் சிறையும் RM12,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. கடந்த மே 11 பிற்பகல் 2.30 மணிக்குத் தம்பதியர் இருவர் சென்ற மோட்டார் சைக்கிளை Nissan Navara வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தி நிறுத்தாமல் செல்லும்படியானக் காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட Nissan Navara வாகனமோட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
32 வயதான Nissan Navara வாகனமோட்டி தன் மீதானக் குற்றத்தை ஒப்புக் கொள்வதாகவும் விபத்தை ஏற்படுத்தியதைத் தாம் உணரவில்லை என்றும் சம்மந்தப்பட்ட காணொலி சமூகவலைத்தளங்கிலில் பரவியது காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் தமது கவனக் குறைவால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதால் தன் மீதானக் குற்றத்தை ஒப்புக் கொள்வதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Seorang lelaki dijatuhi hukuman penjara 30 hari dan denda RM12,000 oleh Mahkamah Majistret Kuala Lumpur selepas didapati bersalah melanggar pasangan menaiki motosikal dan melarikan diri di Jalan Duta. Insiden itu tular di media sosial sebelum suspek menyerah diri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *