விபத்துக்குள்ளான வாகனத்தின் தீயில் கருகிய ஓட்டுநர்!

top-news

ஏப்ரல் 19,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை தடுப்புச் சுவரை மோதி விபத்துக்குள்ளாகி தீயில் கருகியதில் வாகனத்திலிருந்த ஓட்டுநர் அடையாளம் தெரியாத அளவிற்குக் கருகியதாக GUAR மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் MOHD HAPPYZAM RASID தெரிவித்தார். இரவு 11.36 மணிக்கு விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதும் 15 பேர் கொண்ட தீயணைப்பு மட்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் GUAR மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் MOHD HAPPYZAM RASID தெரிவித்தார். 

விபத்தின் காரணமாக வாகனத்தில் தீ ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணயில் தெரிய வந்தாலும் வகனத்திலிருந்தவர் குறித்தான எந்தவோர் அடையாளமும் கண்டறியப்படவில்லை என GUAR மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் MOHD HAPPYZAM RASID தெரிவித்தார். நள்ளிரவு 12.40 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது வாகனத்திலிருந்த உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டதாகவும் பிரேதப் பரிசோதனைக்காகக் கருகிய உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் GUAR மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் MOHD HAPPYZAM RASID தெரிவித்தார்.

Seorang pemandu rentung dalam kemalangan di Lebuhraya Utara-Selatan apabila kenderaannya terbakar selepas merempuh penghadang jalan. Mayat mangsa ditemui dalam keadaan tidak dapat dikenal pasti dan dihantar ke hospital untuk bedah siasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *