கிள்ளான் கொலைகள் - சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 4: கிள்ளான் மற்றும் பந்திங் பகுதிகளில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலாங்கூர் காவல் துறை தலைவர் ஷஸேலி கஹார் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த வழக்குகள் கைது அல்லது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்வதன் மூலம் மட்டுமே முடிவுக்கு வரும் என்பதில்லை என்றும் அவர் கூறினார். கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், பிற சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என அவர் விளக்கினார்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அனைத்து விவரங்களையும் பொதுமக்களிடம் வெளியிட முடியாது என்றும் ஷஸேலி தெரிவித்தார்.
பொதுமக்கள் காவல் துறையை நம்ப வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜனவரி 4 ம் தேதி பந்திங்கில் உள்ள ஒரு விரைவு உணவகத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஜனவரி 7 அதிகாலை கிள்ளான் தாமன் வாங்சா பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒருவரைத் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்தனர்.

கடந்த மாதம், கிள்ளான் முன்னாள் எம்.பி. சார்ல்ஸ் சந்தியாகோ, தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் கிள்ளான் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும், பகல் மற்றும் இரவு நேரங்களில் வெளியே செல்ல பயந்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்த வன்முறைகள், கும்பல் மோதல்கள் மற்றும் பழைய பகை தீர்த்துக்கொள்ளும் சம்பவங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *