கிள்ளான் லோட்டஸ் ஹேர் & நெயில் சலூன் 11-ஆம் ஆண்டு நிறைவு விழா
- Shan Siva
- 11 Oct, 2025
கிள்ளான், அக் 11: கிள்ளான்,செந்தோசாவில் லோட்டஸ் ஹேர் & நெயில் சலூன் ஸ்தாபனத்தின் 11ஆம் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. வண்ணமயமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் சிறப்பு வருகையாளர்களாக தமிழகத்திலிந்து நடிகை மைனா நந்தினி மற்றும் அவரின் கணவர் யோகேஷ் இருவரும் வருகை புரிந்தனர்.
நேர்த்தியாகவும் ,மிக அழகாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த சலூன் பார்த்ததுமே
கவரும் விதமாக இருப்பதாகவும், விழா ஏற்பாடு வித்தியாசமான
முறையில் அமைந்ததாகவும் நடிகை மைனா கூறினார். மிக நுட்பமான விதவிதமான முறைகளில் தனித்துவமாக
இந்த சலூன் திகழ்கிறது என்றும், 11 வருடங்கள் வெற்றிகரமாக இயங்கி
வருவது பாராட்டுக்குரியது என்றும் மைனா கூறினார்.
நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரையும்
ராம் – ருக்மணி தம்பதியர் வரவேற்று உபசரித்தனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



