கெளானாங் கடற்கரைப் பகுதியில் 1,000 மெங்கிரோவ் மரக் கன்றுகள் நடவு!
- Muthu Kumar
- 30 Jul, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
பந்திங், ஜூலை 30-
கெளானாங் கடற்கரைப் பகுதியில் 1,000 மெங்கிரோவ் மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டதாக மாநில சபாநாயகர் துவான் லாவ் வெங் சான் தெரிவித்தார்.
அண்மையில், சிலாங்கூர் சுல்தான் ஷாராப்புடின் இட்ரிஸ் ஷா அல் ஹஜ் இக்கடற்கரைப் பகுதிக்கு வருகை தந்திருந்தபோது விடுத்திருந்த வேண்டுகோளை ஏற்று இவ்வட்டாரத்தில் உயர எழும் கடலலைகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் அதிகமான மெங்கிரோவ் மரக் கன்றுகளை 100 தன்னார்வ சேவையாளர்கள் உதவியுடன் நடவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
கெளானாங் கடற்கரைப் பகுதியில் அதிகமான மீனவர் கிராமங்கள் இருப்பதால் பருவநிலை மாற்றத்தால் வீசும் பலத்த கடல் காற்றும் ஆளுயர எழும் அலைகளைத் தடுத்து நிறுத்தவும் தற்காக்கவும் இந்த மரக் கன்றுகள் இங்கு நடவு செய்யப்பட்டதாக லாவ் வெங் சான் தெரிவித்தார்.
மாநில புறநகர் மேம்பாட்டு வளர்ச்சித்திட்டத் துறையின் உதவி அதிகாரி புவான் நோராஷிக்கின் முகமட் யூசோப் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



