அவசர வழக்குகள்: உடை விதிமுறையில் தளர்வு – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
- Surendran Sumdraraj
- 23 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 23-
அவசர நிலைகளில் காவல் நிலையம் செல்லும் புகாரளிப்போர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடை ஒழுங்கு விதிமுறைகளில் தளர்வு வழங்கப்படும் என நாடாளுமன்ற மக்களவை அமர்வில் அறிவிக்கப்பட்டது.
உள்துறை துணை அமைச்சர் டாக்டர் சம்சுல் அனுவார், கடந்த டிசம்பர் 29ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் இந்த தளர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அவசர நடவடிக்கை தேவைப்படும் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மறுக்கப்படாத வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
குற்றச்செயல்கள், சாலை விபத்துகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தக்கூடிய பாலியல் பலாத்காரம், கொள்ளை, ஒழுக்கக்கேடு, குடும்ப வன்முறை போன்ற வழக்குகள் இந்த தளர்வின் கீழ் வருவதாகவும் அவர் விளக்கினார்.
அவரது கூற்றுப்படி, இத்தகைய சூழ்நிலைகளில் புகாரளிப்போரின் பாதுகாப்பும் நலனும் முதன்மையாகக் கருதப்பட வேண்டும். உடை ஒழுங்கு விதிமுறைகள் காரணமாக அவர்களுக்கு உதவி கிடைக்காமல் போகக் கூடாது என்பது அமைச்சகத்தின் நிலைப்பாடாகும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



