பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - 10 பேர் பலி!
- Muthu Kumar
- 06 Feb, 2026
பாகிஸ்தானில் மசூதியில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள கதீஜா துல் குப்ரா மசூதியில் திடீரென நேரிட்ட குண்டுவெடிப்பில் சுமார் 10 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த குண்டுவெடிப்பு தற்கொலைப் படையின் தாக்குதல் என்றும் கூறப்படுகிறது.
கடந்தாண்டு நவம்பர் மாதத்தில், இஸ்லாமாபாதின் மாவட்ட நீதிமன்றத்தின் நுழைவு வாயிலில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



