ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 2: ஜனவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து நிரந்தர வணிக வளாகங்களிலும் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும் என்று  இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் தற்காலிக அமைச்சர் ஜொஹாரி கானி தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் மாநில நிர்வாக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று ஜோஹாரி கூறினார்.

சுற்றுச்சூழலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து கேட்ட பக்காத்தான் ஹராப்பான் பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ங்கே கூ ஹாம் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அனைத்துவணிக வளாகங்களிலும் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகள் மீது 20 சென் மாசுபாடு கட்டணத்தை அரசாங்கம் ஏற்கனவே அமல்படுத்தியுள்ளது என்று ஜோஹாரி குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *