காபூலில் குண்டுவெடிப்பு - ஆப்கானிஸ்தானில் உச்சக்கட்ட குழப்பம்!

top-news
FREE WEBSITE AD

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள, ஷார்-இ-நவ் பகுதியில் நேற்று குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது.இதில் பலர் உயிரிழந்தனர். இந்தத் தகவலை தலிபான் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர், அப்துல் மதீன் குவானி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "ஆரம்பகட்ட தகவல்படி, பலர் கொல்லப்பட்டு, காயமடைந்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்" என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கும் இந்த, ஷார்-இ-நவ் பகுதி, காபூலின் மிக பாதுகாப்பான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்த இடத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *