பிள்ளையார் சுழி உருவான வரலாறு

top-news
FREE WEBSITE AD

பிள்ளையார் சுழி விளக்கம்

ஒருமுறை சிவபெருமானும், பார்வதியும் வியட்டிப் பிரணவம், சமட்டிப் பிரணவம் என்ற பிரணவங்களை, சங்கல்பிக்க, அவை சுழன்று பலகோடி அண்டங்களையும் வலம் வந்தன. இவற்றின் சுழற்சியையும், வேகத்தையும் தேவர்களாலும், மகரிஷிகளாலும் கட்டுப்படுத்த இயல வில்லை. அனைவரும் ஸ்ரீவிநாயகப் பெருமானிடம், சுவாமி தங்களது அம்மையப்பரால் சங்கல்பிக்கப்பட்ட இவ்விரு பிரணவங்களின் சுழற்சியைக் கண்டு திகைத்து நிற்கிறோம். இதன் சிருஷ்டியின் காரணமும் எமக்குப் புரியவில்லை. தாங்கள்தான் கருணை புரிய வேண்டும் என்று வேண்டினர். 

விநாயகப் பெருமான் கோடிக் கணக்கான அண்டங்களையும் பரி பாலனம் செய்பவர். எனவேதான் அவர் பெருவயிறுடையவரானார். அவர் தமது திருக்கரத்தால் பெரு வயிற்றைத் தடவவே அவர் நாபியிலிருந்து வெளிப்பட்ட அகமர்தசண மகரிஷி, அதிவேகமாக சுழன்று ஓங்கார உருவங்களின் இடையே அமர்ந்து தமது தபோ வலிமையால் அவற்றை உ என்ற பிள்ளையார் சுழியாக மாற்றி புதிய உருவை சிருஷ்டித்தார். இதன்பிறகுதான் இறைவனால் சிருஷ்டிக்கப் பட்ட அனைத்துப் பொருள்களின், ஜீவன்களின் இயங்கங்களே தொடங்கின. 

இவ்வாறு இயக்கங்களுக்கு மூல காரணமாக இருந்து இயக்குபவர் அகமர்தசண மகரிஷியே, எனவே விநாயகப் பெருமானே தனது பெருவயிற்றில் வைத்துப் பரிபாலிக்கும் பிரபஞ்சத்தில் அகமர்தசண மகரிஷி மூலம் உ என்னும் பிள்ளையார் சுழியை, அம்மையப்பருடைய பிரணவ நேத்திர தரிசனங்களிலிருந்து உருவாக்கி, இந்த சிருஷ்டி இயக்கத்தை துவக்கினார். எனவே நாம் எந்தக் காரியத்தையும் தொடங்குமுன் உ என்ற பிள்ளையார் சுழியிடுவதோடல்லாது சிருஷ்டி இயக்கத்திற்குத் தனது அற்புத தவ பலனை அளித்த அகமர்தசண மகரிஷியையும் துதிக்க வேண்டும். இயல், இசை, நாடகம், கல்வி, தொழில், நிலம், வாகனம் என்ற எந்தச் செயலையும் தொடங்குமுன் அகமர்சண மகரிஷியைத் தொழ வேண்டும். நூல், சிற்பம், ஓவியம், இசை, விளையாட்டு போன்ற எந்தக் கலையையும் தொடங்குமுன்பும் அகமர்தசண மகரிஷியை வணங்கி பிள்ளையார் சுழியுடன் தொடங்கினால் அவரை அளித்த விநாயகப் பெருமானே மனமகிழ்ந்து அனைவரையும் அருள்வார்...

:- லட்சுமி சுப்பிரமணியம்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *