அரியலூர் பிரசாரத்தின் போது திடீரென பதறிய த.வெ.க தலைவர் விஜய்!

top-news
FREE WEBSITE AD

திருச்சியில் மக்கள் சந்திப்பை நடத்திய விஜய் தொடர்ந்து அரியலூரில் மக்களை சந்தித்து பேசினார்.பிரச்சார வாகனத்தின் மேல் நின்று பேசிக்கொண்டிருந்த போது அங்கு இருந்த கம்பி ஒன்றில் தவெக தொண்டர் ஒருவர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் ஏறினார். இதைப்பார்த்து பதறிய விஜய், தம்பி ப்ளீஸ் இறங்கு என்று கூறினார். அங்கே இருந்த ஒருவரை பார்த்து.. பிரதர் அந்த நபர் இறங்கிய பிறகு தனது பேச்சை விஜய் தொடங்கினார். இதனால் கூட்டத்தில் சில வினாடிகள் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் முதன் முதலாக திருச்சியில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கியுள்ளார். மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் அளவிற்கு முதல் நாள் கூட்டமே அமைந்துவிட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து மரக்கடை செல்லும் வரை தொண்டர்கள் நாலாபுறமும் விஜய்யின் பரப்புரை வாகனத்தை சூழ்ந்துகொண்டனர்.

திருச்சி வந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுத்ததோடு, அவரை நகர விடாமல் சூழ்ந்துகொண்டனர். இதனால் காலையில் 9.30 மணிக்கே சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த விஜய், அங்கிருந்து திருச்சி மரக்கடைக்கு செல்ல 4 மணி நேரம் ஆகிவிட்டது. மொத்தம் உள்ள 6 கிமீ தூரத்தை கடப்பதற்கு 4 மணி நேரம் ஆகியதால் திட்டமிட்டப்படி மக்கள் சந்திப்பை நடத்த முடியவில்லை. ஆனால் மதியம் 1.30 மணியளவில் திருச்சி மரக்கடையில் விஜய் மக்களை சந்தித்து பேசினார். இதன் காரணமாக திருச்சி நகரமே ஸ்தம்பித்து போய்விட்டது.

தொடர்ந்து விஜய் அங்கிருந்து அரியலூருக்கு கிளம்பினார். அதே பிரசார வாகனத்தில் அமர்ந்தபடியே விஜய் சென்றார். அப்போதும் தொண்டர்கள் பைக்கில் விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து வந்தனர். திருச்சியில் இருந்து அரியலூர் நோக்கி விஜய்யின் வாகனம் புறப்பட்டு வந்தது. சரியாக 8.30 மணியளவில் தொண்டர்களின் உற்சாக வரவேற்புகளோடு திருச்சி காமராஜர் சாலையை வந்தடைந்தது.

இரவு நேரம் ஆனாலும் விஜய்யை பார்த்துவிட்டு தான் செல்ல வேண்டு என அதிக அளவிலான பெண்கள், குழந்தைகள் கூடி இருந்தனர். அப்போது பேசிய விஜய், "உங்களடைவிட.,உங்களின் பாசத்தை விட.. உங்களின் அன்பை விட இந்த உலகத்தில் எனக்கு வேற எதுவும் பெரியதாக தெரியவில்லை. சாதாரணமாக இருந்த இந்த விஜயை இவ்வளவு பெரிய உயரத்தில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டு இருக்கீங்க.. உங்கள் வீட்ல ஒருத்தராகவே மாத்திட்டீங்க. உங்க சொந்தக்காரனாகவே மாத்திட்டீங்க.

என்னங்க பெரிய பணம்,பணம் வேணுங்கிற அளவுக்கு அளவுக்கு பாத்தாச்சு.அரசியலுக்கு வந்து தான் நான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? அதுக்கு கொஞ்சம் கூட அவசியம் இல்லை.எனக்கு எல்லாத்தையும், எல்லாமும் கொடுத்த உங்களுக்காக உழைப்பதை விட எனக்கு வேற என்ன வேலை? என்று விஜய் பேசினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *