பிரச்சாரத்தில் தயவு செய்து அரச விவகாரத்தைக் கையில் எடுக்காதீர்கள்! - அன்வார் வேண்டுகோள்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 15: ஆகஸ்ட் 1 அன்று நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் நெகிரி செம்பிலானின் அரச குடும்ப விவகாரம் தொட்டும் எவரும் பேசக்கூடாது என்று எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பக்காத்தான் ஹரப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

நேற்று இரவு பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் பேசிய அன்வார், தற்போது நடைபெற்று வரும் அரச குடும்ப சர்ச்சைக்கு தேர்தல் அரசியலில் இடமில்லை என்றும், நெகிரி செம்பிலானில் தற்போதுள்ள அரசியலமைப்பு முறை மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இது குறித்து எந்தக் குழப்பமும் ஏற்பட தாம் விரும்பவில்லை என்று அன்வார் கூறினார்.

பக்காத்தான் ஹரப்பான் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளது என்றும் பிகேஆர் தலைவர் மேலும் கூறினார்.

மற்ற கட்சிகளைச் சேர்ந்த நண்பர்களுக்கும் இதைத் தாம் அறிவுறுத்த விரும்புவதாகவும், இந்த விவகாரத்தை  பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் இது தேர்தலுக்குத் தொடர்பில்லாதது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நான் கவலைப்படுவதாலோ அல்லது பயப்படுவதாலோ அல்ல, மாறாக முடியாட்சியையும் கூட்டாட்சி அரசியலமைப்பையும் பாதுகாப்பது நமது கடமையாகும். நாம் இதை ஒரு அரசியல் சர்ச்சையாக மாற்றிவிட்டால் இதற்கு முடிவே இருக்காது என்று அன்வார் சுட்டிக்காட்டினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *