உலகில் 417 மில்லியன் குழந்தைகள் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து இழப்பில் தவிக்கின்றனர் – யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை
- Tamil Malar (Reporter)
- 21 Nov, 2025
செய்தி - வெற்றி மைந்தன்
ஜெனீவா, நவ. 21-
குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 417 மில்லியன் குழந்தைகள் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகிய அடிப்படைத் தேவைகளில் பெரும் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், சஹாராவுக்குக் கீழ் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த குழந்தைகளே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தெற்காசியா, கிழக்காசியா, பசிபிக் பிராந்தியங்களும் உயர்ந்த பற்றாக்குறை விகிதங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.
இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து குழந்தை வறுமை ஒழிப்பில் ஏற்பட்ட “குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” இப்போது ஆபத்தை எதிர்கொள்கிறது என்று யுனிசெப் எச்சரிக்கிறது. உலக நாடுகளின் அரசுகள் மேம்பாட்டு ஒத்துழைப்பு, மனிதாபிமான உதவிகளுக்கான முக்கிய நிதியை வெகுவாகக் குறைத்து வருவதே இதற்குக் காரணம் என்று அது சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிதிக் குறைப்பு தொடர்ந்தால், மில்லியன் கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் இருண்டுவிடும் என்று யுனிசெப் எச்சரித்துள்ளது. உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



