சுயதொழில் செய்பவர்கள் 8.69 லட்சம் பேர் PERKESO திட்டத்தில் பதிவு – துணை அமைச்சர்

top-news

கோலாலம்பூர், பிப். 5-

PERKESO செயல்படுத்தும் சுய பாதுகாப்பு திட்டம் (Skim Lindung Kendiri) கீழ், கடந்த ஆண்டு டிசம்பர் 31 வரை 869,913 சுயதொழில் செய்பவர்கள் பதிவு செய்து செயலில் பங்களித்து வருவதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மனிதவளத் துறை துணை அமைச்சர் டத்தோ கைருல் பிர்டவுஸ் அக்பர் கான் கூறியதாவது, இந்த எண்ணிக்கையில் 299,674 பேர் ‘கிக்’ (gig) துறையில் பணிபுரிபவர்கள் ஆகும். இதில் e-hailing சேவையில் ஈடுபடுவோரும் அடங்குவர்.

இந்த மொத்த எண்ணிக்கை, சுயதொழில் செய்பவர்களிடையே சமூக பாதுகாப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதை காட்டுகிறது என அவர் கூறினார். குறிப்பாக வேலை சந்தை வேகமாக மாற்றமடைந்து வரும் சூழலில், பாதுகாப்பு திட்டங்களில் சேர்வது முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், டிஜிட்டல்மயமாக்கல் வேகமாக வளர்ந்ததால் நாட்டின் தொழில்சந்தை அமைப்பு மாறி வருவதாகவும், இளம் தலைமுறையினர் மற்றும் குறைந்த வருமானம் கொண்டோர் அதிக அளவில் நெகிழ்வான வேலைகள் அல்லது கிக் பணிகளை முக்கிய வருமான ஆதாரமாகத் தேர்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *