நாடு முழுவதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிய பள்ளி பயணத்தை ஆரம்பித்தனர்-கல்வி அமைச்சர்

top-news

ஷா ஆலாம், ஜன. 12-

2026 கல்வியாண்டிற்கான புதிய பள்ளி அமர்வு இன்று நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக தொடங்கிய நிலையில், ஆண்டு ஒன்று (Tahun Satu), படிவம் ஒன்று (Tingkatan Satu) ஆகிய நிலைகளில் மட்டும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்த ஆண்டில் 4 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஆண்டு ஒன்றில் பதிவு செய்துள்ளதுடன், மேலும் சுமார் 4 லட்சம் மாணவர்கள் படிவம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் படீலினா சாடிக் தெரிவித்தார்.
“ஆண்டு ஒன்றில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அதேபோல், படிவம் ஒன்றிலும் சுமார் 4 லட்சம் மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் தான் இந்த ஆண்டு புதிய கல்விப் பயணத்திற்கு நாம் வரவேற்கிறோம்,” என அவர் கூறினார்.

2026 கல்வியாண்டின் முதல் பள்ளி நாளை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். 

புதிய கல்வியாண்டு தொடக்கம், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், அவர்களின் ஆளுமை மேம்பாட்டிற்கும் முக்கியமான தொடக்கமாக அமைகிறது என அமைச்சர் குறிப்பிட்டார். அதேசமயம், பள்ளி சூழல் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியான கற்றல் அனுபவமாகவும் அமைய கல்வி அமைச்சகம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஆசிரியர்கள், பெற்றோர்,  பள்ளி நிர்வாகங்கள் இணைந்து, 2026 கல்வியாண்டைச் சிறப்பாக முன்னெடுக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *