“ருமா பங்க்சா” முயற்சியால் UMNO-வில் பழைய தலைவர்கள் மீண்டும் சேர வாய்ப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 20-

16ஆவது பொதுத் தேர்தலை (PRU-16) முன்னிட்டு, நீக்கப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் UMNO தலைவர்கள் பலர் “ருமா பங்க்சா” முயற்சியின் மூலம் மீண்டும் கட்சியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக UMNO சுங்கை பெசார் பிரிவு தலைவர் டத்தோ ஸ்ரீ ஜமால் யூனோஸ் தெரிவித்ததார்.

 கைரி ஜமாலுடின் அபு பாக்கர் மீண்டும் கட்சியில் சேர முயற்சித்திருப்பது, இந்த முயற்சி எந்த நிபந்தனையும் இன்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றதற்கான தெளிவான அறிகுறி என கூறினார்.

“UMNO தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி முன்னாள் உறுப்பினர்களை மீண்டும் வரவேற்கும் பெரிய மனசு கொண்டவர். கைரியை நிபந்தனையின்றி ஏற்கும் அவரின் முடிவு சிறந்த முன்னேற்றமாகும்,” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை, கைரி தனது மீள் இணைப்பு கோரிக்கையை UMNO தலைவரிடம் நேரில் வழங்கியதாக கூறப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *