Op E-Cig Mega: 8 மில்லியன் மதிப்பிலான வேப் பொருட்கள் பறிமுதல்
- Tamil Malar (Reporter)
- 16 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 16-
காவல் துறை நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி 10 முதல் முன்னெடுத்து வரும் Op E-Cig Mega நடவடிக்கையின் மூலம் 8 மில்லியனை மீறும் மின்னணு சிகரெட் மற்றும் தொடர்புடைய பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.
இந்த சிறப்பு நடவடிக்கை 13 மாநிலங்களில் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டது. இதில் Kementerian Kesihatan Malaysia (KKM), Kementerian Perdagangan Dalam Negeri dan Kos Sara Hidup (KPDN), உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் Lembaga Hasil Dalam Negeri (LHDN) ஆகியவை இணைந்து செயல்பட்டன.
புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறையின் துணை இயக்குநர், இந்த நடவடிக்கை வேப் பொருட்களை விற்பனை செய்து விநியோகிக்கும் இடங்களை குறிவைத்து நடத்தப்பட்டது.
முன்னதாக மேற்கொண்ட உளவுத்தகவல் மற்றும் கண்காணிப்பின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட 154 வளாகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கைக்காக பல்வேறு துறைகளில் இருந்து மொத்தம் 2,140 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
சட்ட விதிகளை மீறும் விற்பனையை தடுக்கவும், அரசுக்கு வரவேண்டிய வரி இழப்புகளை கட்டுப்படுத்தவும் இத்தகைய ஒருங்கிணைந்த சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என போலீஸ் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



