பினாங்கு தைப்பூசத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் திரள்வார்கள் என எதிர்பார்ப்பு
- Tamil Malar (Reporter)
- 06 Jan, 2026
ஜார்ஜ்டவுன், ஜன. 6-
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தைப்பூசம் கொண்டாட்டத்தையொட்டி, பினாங்கு தீவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்து பக்தர்களும் சுற்றுலாப்பயணிகளும் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (LWHPP) துணைத் தலைவர் டாக்டர் லிங்கேஷ்வரன் கூறுகையில், இதனை முன்னிட்டு கோவில்கள், தொடர்புடைய ஏற்பாட்டுக் குழுக்கள் சிறப்பான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்திய சமூகத்திற்கு முக்கியமான இந்தப் பெருவிழா முந்தைய ஆண்டுகளைப் போல சுமூகமாக நடைபெறும் என உறுதி அளித்தார்.
"கடந்த ஆண்டு அரச மலேசியக் காவல்துறை (PDRM) பதிவுகளின்படி, சுமார் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் வந்தனர். இந்த ஆண்டு மூன்று நாட்கள் கொண்டாட்டம் நடைபெறுவதால், இன்னும் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். சனிக்கிழமை தொடங்கி, ஞாயிறு பிப்ரவரி 1ஆம் தேதி உச்சகட்ட கொண்டாட்டத்துடன் நடைபெறும்.
மேலும், சென்னையிலிருந்து பினாங்குக்கு நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால், குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்," என்றார்.
இன்று ஜாலான் கெபுன் புங்காவில் உள்ள தன்னீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானம் கோவிலில் ஊடகவியலாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



