காராக் நெடுஞ்சாலை விபத்தில் பெண் பலி! இரு குழந்தைகள் படுகாயம்!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 9,

கோலாலம்பூரிலிருந்து காராக் செல்லும் நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடுப்புச் சுவரை மோதி விபத்துக்குள்ளானதில் 30 வயதுள்ள பெண் வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று காலை 8 மணிக்கு விபத்து குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் பெற்றதும் சம்பவ இடத்திற்குப் பெந்தோங் மீட்பு ஆணையத்தின் அதிகாரிகள் விரைந்ததாகப் பகாங் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Zulfadli Zakaria தெரிவித்தார். 

விபத்துக்குள்ளான Perodua Bezza வாகனத்தில் மூவர் சிக்கியிருந்த நிலையில் ஓட்டுநர் இருக்கையிலிருந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பின் இருக்கையில் இருந்த பதின்ம வயது சிறுவர்கள் இருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் பகாங் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Zulfadli Zakaria தெரிவித்தார். படுகாயம் அடைந்த இரு சிறுவர்களையும் சிகிச்சைக்காகப் பெந்தோங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருப்பதாகவும் மேலதிக விசாரணைகளைக் காவல்துறை மேற்கொண்டு வருவதாகவும் பகாங் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Zulfadli Zakaria தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *