தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த “தேசிய ஒற்றுமை ஆணையம்” அமைக்க வேண்டும் – லீ லாம் தாய்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 8-

மலேசியாவில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை பாதுகாக்கவும் வலுப்படுத்தவும், “தேசிய ஒற்றுமை ஆணையம்” (National Harmony Commission) என்ற ஆணையத்தை உருவாக்க வேண்டும் என தேசிய ஒற்றுமை போராளி தான் ஸ்ரீ லீ லாம் தாய் பரிந்துரைத்துள்ளார்.

மலேசியாவின் பல இன, பல மத மற்றும் பல பண்பாட்டு தன்மை நீண்ட காலமாக நாட்டின் மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது என்று அவர் கூறினார். இந்த பன்முகத்தன்மை காரணமாகவே மலேசியர்கள் அமைதியாகவும் பரஸ்பர மரியாதையுடனும் ஒன்றாக வாழ்ந்து, நாட்டின் செழிப்பை பகிர்ந்து கொண்டுள்ளனர் என்றார்.

ஆனால் சமீப காலங்களில் சமூக ஊடகங்களிலும் பொதுவாழ்விலும் இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டும் சில சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும் அவர் கவலை தெரிவித்தார். இத்தகைய சம்பவங்கள் நாட்டின் ஒற்றுமை மற்றும் சமூக அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அவர் எச்சரித்தார்.

இதனால், இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான நல்லுறவை பாதுகாக்கவும், எந்தவொரு சர்ச்சை அல்லது உணர்ச்சி புண்படுத்தும் சம்பவங்களையும் விரைவாகவும் நியாயமாகவும் கையாளவும் ஒரு ஆணையம் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆணையம் உருவாக்கப்பட்டால், நாட்டில் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்துவதிலும், இன மற்றும் மத நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் லீ லாம் தாய் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *