இளம்பெண் குளிப்பதை எட்டிப்பார்த்த வெளிநாட்டு ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 27 Mar, 2025
மார்ச் 27,
வெளிநாட்டு ஆடவர் ஒருவரைக் கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியது தொடர்பாகக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கோம்பாக் மாவட்டக் காவல் ஆணையர் Noor Ariffin Mohamad Nasir தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக் கிழமை நண்பகல் 2.30 மணிக்கு இளம்பெண் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருக்கும் போது வெளிநாட்டு ஆடவர் எட்டிப்பார்த்ததால் அந்த ஆடவரைப் பொதுமக்கள் தாக்கியதாக Noor Ariffin Mohamad Nasir தெரிவித்தார்.
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட 19 வயது இளம்பெண் கோம்பாக் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பிற்பகல் 3 மணிக்கு 35 வயது வெளிநாட்டு ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்திருப்பதாகவும் கோம்பாக் மாவட்டக் காவல் ஆணையர் Noor Ariffin Mohamad Nasir தெரிவித்தார். தாம் குளித்துக் கொண்டிருக்கும் போது குளியலறையின் கண்ணாடி ஜன்னலில் தொலைப்பேசி இருப்பதைக் கண்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த நிலையில் கைத்தொலைப்பேசியின் உரிமையாளரான 34 வயது வெளிநாட்டு ஆடவர் கைது செய்யப்பட்டு 4 நாள்கள் விசாரணைக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கோம்பாக் மாவட்டக் காவல் ஆணையர் Noor Ariffin Mohamad Nasir தெரிவித்தார்.
Seorang lelaki warga asing berusia 35 tahun ditangkap selepas mengintai seorang wanita berusia 19 tahun yang sedang mandi di rumahnya. Insiden itu menyebabkan lelaki tersebut dipukul oleh orang awam sebelum polis menahannya untuk siasatan lanjut selama empat hari.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *