குண்டர் கும்பலைச் சேர்ந்த ஆடவர் சுட்டுக் கொலை!

top-news

மார்ச் 8,

பல்வேறு குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வந்த 63 வயதுள்ள ஆடவர் நேற்று காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார். தேடப்படும் ஆடவர் ஜொகூரில் Taman Molek குடியிருப்பில் இருப்பதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அவரைக் கைது செய்யும் போது அவர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதால் தற்காப்புக்காகக் கவல்துறையினர் துப்பாக்கிச் நிகழத்தியதாக Datuk M Kumar தெரிவித்தார். 

சுடப்பட்ட ஆடவர் 14 குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வந்ததாகவும் பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்து தற்போது சுடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இத்துப்பாக்கிச் சூட்டில் காவல் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை என அவர் தெரிவித்தார். 

Seorang lelaki berusia 63 tahun dengan 14 rekod jenayah maut dalam insiden berbalas tembakan dengan polis di Taman Molek, Johor Bahru. Suspek melepaskan tembakan ketika diperiksa menyebabkan polis bertindak balas. Polis menemui sepucuk pistol dan peluru di lokasi kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *