வாகனமோட்டியை இரும்புக் கம்பியால் தாக்க முயன்ற ஆடவர் கைது!
- Thinagaren Sanggaren
- 20 Oct, 2025
அக்தோபர் 20,
ஆடவர் ஒருவர் இரும்புக் கம்பியால் வாகனத்தையும் அதன் ஒட்டுநரையும் தாக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து தாக்குதலில் ஈடுபட்ட ஆடவரைக் காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்ததாகக் கூச்சிங் மாவட்டக் காவல் ஆணையர் Alexson Naga Chabu தெரிவித்தார். காலை 8.16 மணிக்கு Jalan Laksamana Cheng Ho சாலையில் 32 வயது ஆடவர் அபாயகரமாக வாகனத்தைச் செலுத்தி மற்றொரு வாகனத்தை உரசியதாக நம்பப்படுகிறது.
இதனால் இரு வாகனமோட்டிகளுக்கும் வாக்குவாதம்
ஏற்பட்டதாகவும் 32 வயது ஆடவர் இரும்புக் கம்பியைக் கொண்டு வாகனத்தையும் 47 வயது ஆடவரையும்
தாக்கியதாக நம்பப்படுகிறது. தாக்குதலுக்குள்ளான மற்றொரு வாகனமோட்டியான 47 வயது ஆடவர்
அளித்த புகாரின் அடிப்படையில் இரவு 11.50 மணிக்குக் கெராஞ்சியில் உள்ள ஒரு வாகனம் நிறுத்துமிடத்தில்
32 வயதான ஆடவரைக் கைது செய்தததாக கூச்சிங் மாவட்டக் காவல் ஆணையர் Alexson
Naga Chabu தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



