கிள்ளான் செந்தோசாவில் 34 வயது ஆடவர் வெட்டிக் கொலை

top-news

கிள்ளான், டிச. 18-

கிள்ளான், செந்தோசா பகுதியில் நேற்று நடந்த சண்டையில் 34 வயது மதிக்கத்தக்க ஆண் ஆடவர் வெட்டப்பட்டு கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

சிலாங்கூர் காவல்படைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார், இந்த சம்பவம் குறித்து நேற்று இரவு 11.10 மணிக்கு காவல் துறைக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறினார்.

"மேலும் தொடக்க கட்ட விசாரணையில் , 34 வயதுடைய உள்ளூர் ஆண் ஒருவர் வெட்டப்பட்டு இறந்தது தெரியவந்தது. இந்த வழக்கு குற்றவியல் சட்டப்பிரிவு 302-ன் கீழ் விசாரிக்கப்படுகிறது. சம்பவத்தின் நோக்கம் இன்னும் விசாரணையில் உள்ளது" என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த கொலை சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *