பெண்கள் கழிவறையை நோட்டமிட்ட ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 31 May, 2025
மே 31,
எரிவாயு நிலையத்திலுள்ள பெண்கள் கழிவறைக்குள் அத்துமீறி நுழைந்து கழிவறைக்குள் இருந்த பெண்ணை எட்டி பார்த்ததாக 26 வயது உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான CCTV காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியதும் சம்மந்தப்பட்ட ஆடவரைக் கைது செய்தததாக மத்திய செபராங் பிறை மாவட்டக் காவல் ஆணையர் Helmi Aris தெரிவித்தார்.
இச்சம்பவம் கடந்த மே 5 ஆம் திகதி காலை 6.21 மணியளவில் BUKIT MERTAJAM எரிவாயு நிலையத்தில் நிகழ்ந்ததாகவும் தற்செயலாக CCTV காணொலியைப் பார்த்த ஊழியர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து 26 வயது உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டதாகவும் மேலதிக விசாரணைக்காக 4 நாள்கள் விசாரணைக் காவலில் தடுத்து வைக்கும்படி Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணை அடையாளம் காண முடியாத நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய செபராங் பிறை மாவட்டக் காவல் ஆணையர் Helmi Aris தெரிவித்தார்.
Seorang lelaki tempatan berusia 26 tahun ditahan kerana menceroboh tandas wanita di sebuah stesen gas Bukit Mertajam dan mengintai seorang wanita. Tindakan suspek terbongkar selepas rakaman CCTV tular di media sosial. Siasatan masih diteruskan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *