435 லிட்டர் KETUM பறிமுதல்! ஆடவர் கைது!
- Sangeetha K Loganathan
- 08 Jul, 2025
ஜூலை 8,
சட்டவிரோதமாக KETUM தயாரித்து விற்பனை செய்து வந்த ஆடவரைப் பாதுகாப்பு கடத்தல் பிரிவான PGA கைது செய்தது. பகாங் ஜெங்கா மாவட்டதிலுள்ள செம்பனை தோட்ட வீட்டை KETUM தயாரிக்கும் வளாகமாக மாற்றியமைத்து விற்பனையில் ஈடுபடுவதாகப் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்த நிலையில் சம்மந்தப்பட்ட ஆடவரின் வீட்டை PGA அதிகாரிகள் சோதனையிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையின் போது சம்மந்தப்பட்ட வீட்டிலிருந்து 435 லிட்டர் கொண்ட 290 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அதன் மதிப்பு RM 35,700.00 என கண்க்கிடப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஆடவர் 49 வயது உள்ளூர் ஆடவர் என்றும் மேலதிக விசாரணைக்காக MARAN மாவட்டக் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
PGA berjaya menahan seorang lelaki tempatan berusia 49 tahun di Jengka, Pahang kerana disyaki menghasilkan dan menjual air ketum secara haram. Dalam serbuan di rumah suspek, 435 liter ketum bernilai RM35,700 dirampas. Suspek ditahan di IPD Maran.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



