நீரில் மூழ்கிய ஆடவர் பலி!

top-news

ஜூன் 7,

நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்றதாக நம்பப்படும் 47 வயது ஆடவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்தவர் 47 வயது Abdul Hafidz எனும் காஜாங்கைச் சேர்ந்தவர் என்றும் விடுமுறைக்காகக் கிளாந்தான் Kuala Kraiயில் உள்ள சொந்த ஊருக்கு வந்திருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Kuala Krai மாவட்டக் காவல் ஆணையர் Mazlan Mamat தெரிவித்தார். 

நண்பகல் 12.30 மணியளவில் Sungai Kenerong ஆற்றுக்கு 10 நண்பர்களுடன் சென்றதாகவும் நீரின் அளவைச் சோதிப்பதற்காக 47 வயது ஆடவர் ஆற்றில் இறங்கிய போது ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. சுமார் 2 மணி நேரம் Dabong மாவட்ட மீட்புப் படையினர் தேடுதல் பணியை மேற்கொண்டதில் மாலை 4.13 மணிக்கு நீரில் மூழ்கிய 47 அடவரின் சடலம் மீட்கப்பட்டதாக Kuala Krai மாவட்டக் காவல் ஆணையர் Mazlan Mamat தெரிவித்தார்.

Seorang lelaki berusia 47 tahun, Abdul Hafidz dari Kajang, lemas selepas dihanyutkan arus ketika mandi di Sungai Kenerong, Kuala Krai bersama rakan-rakannya. Operasi mencari selama dua jam berjaya menemui mayat mangsa sekitar jam 4.13 petang

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *