மீண்டும் ஒரு துப்பாக்கி கொலை சம்பவம்!

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

சிரம்பான், நவ. 20-

நேற்று இரவு, செண்டாயான் அருகே உள்ள நுசாரி பிஸ் செண்டாயன் உணவகத்தில், ஒரு இளைஞர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். இந்த சம்பவம், பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இரவு 11.23 மணிக்கு காவல்துறைக்கு இந்தச் சம்பவம் குறித்து தெரியப்படுத்தியதாக, சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் அஜஹர் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கொலையுண்டவரை நோக்கி சந்தேக நபர்கள் வருவதைக் கண்டு அவர் அங்கிருந்த சாலையில் ஓட ஆரம்பித்ததாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். அவரைப் பின் தொடர்ந்த சந்தேக நபர்கள் கண் இமைக்கும் நேரில் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

சம்பவத்துக்குப் பின், போலீஸ் குழு விரைந்து வந்து கொலையுண்டவரின் உடலை மீட்டு, சிரம்பான் மருத்துவமனைக்கு அனுப்பியது. இளைஞனின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் கூட்டு கொலை அல்லது தனிப்பட்ட பழிவாங்கல் தொடர்பானது என சந்தேகிக்கப்படுகிறது. வாகனங்கள் தப்பி ஓடியதாகவும், அவற்றின் எண் பதிவுகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *