மின்சாரம் தாக்கியதில் ஆடவர் பலி!

top-news

ஜுன் 8,


மின்சாரம் தாக்கியதில் 42 வயது ஆடவர் உடல் கருகி மாண்டார். பிற்பகல் 3.08 மணிக்கு இச்சம்பவம் தொடர்பாகப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதாகச் சபா மாநில மீட்பு ஆணையச் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். சாலையோரமிருந்த மாமரத்திலிருந்த மாம்பழங்களைப் பறிக்க முயற்சிக்கும் போது மின்சாரம் தாக்கியதாக நம்பப்படுகிறது. உயிரிழந்தவர் 42 வயது உள்ளூர் ஆடவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

Kampung Bambangan பகுதியிலிருந்த மாங்காய் மரத்திலிருந்த மாம்பழங்களைப் பறிக்கும் போது அவர் இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தியதாகவும் இரும்புக் கம்பி மின்சாரக் கேபிளில் பட்டதும் மின்சாரம் தாக்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த 42 வயது ஆடவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக Papar மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டிருப்பதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang lelaki tempatan berusia 42 tahun maut akibat renjatan elektrik ketika cuba memetik buah mangga menggunakan dawai besi yang terkena kabel elektrik. Kejadian berlaku di Kampung Bambangan, Sabah, dan mayat dihantar ke Hospital Papar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *