மண் சரிவில் புதையுண்ட ஆடவர் பலி!

- Sangeetha K Loganathan
- 16 May, 2025
மே 16,
JCP இயந்திரத்தில் குழியைத் தோண்டும் நடவடிக்கையின் போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி புதையுண்ட அடவர் சடலமாக மீட்கப்பட்டார். பகாங் லிப்பிஸில் உள்ள Kampung Berhamah காட்டுப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் இரவு 10 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினருடன் விரைந்ததாகவும் லிப்பிஸ் மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Ariffa Mamat தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட பகுதியில் சட்டவிரோதமாகத் தங்கம் எடுக்கும் பணிகள் மேற்கொண்ட நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இரவு 11.15 மணிக்கு Ayub Ahmad எனும் JCP ஓட்டுநரின் உடல் சடலமாக மீட்கப்பட்டதாக லிப்பிஸ் மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Ariffa Mamat தெரிவித்தார். உயிரிழந்தவர் 37 வயதான உள்ளூர் ஆடவர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலதிகமாகக் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang lelaki tempatan berusia 37 tahun maut selepas tertimbus dalam kejadian tanah runtuh ketika mengendalikan JCP di kawasan hutan Kampung Berhamah, Lipis. Kejadian dipercayai berlaku semasa aktiviti perlombongan emas haram dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *