மருமகனைப் பாராங்கத்தியால் வெட்டிய தாய்மாமன் கைது!
- Thinagaren Sanggaren
- 30 Oct, 2025
அக்தோபர் 30,
குடும்பத் தகராறு காரணமாகத் தன் சொந்த தங்கையின் மகனைப் பாராங்கத்தியால் வெட்டி கொலை செய்த 55 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். பரம்பரை நிலத்தில் பங்கு கொடுக்காததால் 44 வயது மருமகனை வெட்டியதாகக் கைது செய்யப்பட்டவர் இன்று தும்பாட் Majistret நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டார். பரம்பரை நிலத்தைத் தங்கை மகன் முழுமையாக அபகரித்ததாகவும் பங்கு கேட்க சென்ற தனது மகளின் புகைப்படத்தைச் சமூகவலைத்தலங்களில் தவறாகப் பரப்பியதால் கோபத்தில் பாராங்கத்தியால் வெட்டியதாகக் கைது செய்யப்பட்ட 55 வயது ஆடவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
கடந்த அக்தோபர் 24 தும்பாட்டில் உள்ள Kampung Kok Bedollah குடியிருப்புப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் சம்பவ இடத்திலேயே 55 வயது ஆடவரைப் பாராங்கத்தியுடன் காவல் அதிகாரிகள் கைது செய்ததாகவும் முதற்கட்ட நீதிமன்ற விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே 44 வயது ஆடவர் உயிரிழந்த நிலையில் கொலை குற்றத்தின் கீழ் அடுத்த ஆண்டு ஜனவரி உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் என்றும் அதுவரையில் குற்றம் சாட்டப்பட்டவர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் தடுப்புக் காவலில் வைக்கும்படி தும்பாட் Majistret நீதிமன்றம் உத்தரவிட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



