நீரில் மூழ்கிய நண்பன்! காப்பாற்றிய சிறுவன் பலி!
- Thinagaren Sanggaren
- 18 Jan, 2026
ஜனவரி 18,
நீரில் மூழ்கிய தன் நண்பரைக் காப்பாற்ற முயற்சித்த 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். தன் 2 நண்பர்களுடன் கோலா கிராய் Bunut Payung ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்த தன் நண்பனைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட 12 வயது NAIM ZAHIR ALAM எனும் சிறுவன் நண்பனைக் காப்பாற்றியதும் சுழலில் சிக்கி உயிரிழந்தான். உடன் இருந்த மற்ற இரு சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 3.10 மணிக்குப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் 3.16 மணிக்குச் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளைத் தொடங்கியதாக KOTA DARUL NAIM மாவட்ட மீட்பு ஆணையர் Asri Abdul Rahman தெரிவித்தார். தொடர் தேடுதலுக்குப் பின் மாலை 4.41 மணிக்கு 12 வயது சிறுவனின் உடல் 15 மீட்டர் ஆழத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும் மருத்துவப் பரிசோதனையில் சிறுவன் உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகவும் KOTA DARUL NAIM மாவட்ட மீட்பு ஆணையர் Asri Abdul Rahman தெரிவித்தார். 12 வயது சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோலா கிராய் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகலும் KOTA DARUL NAIM மாவட்ட மீட்பு ஆணையர் Asri Abdul Rahman தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



