மாடு முட்டியதில் ஆடவர் பலி!
- Sangeetha K Loganathan
- 06 Jul, 2025
ஜூலை 6,
இன்று காலை 7.55 மணியளவில் கெர்லிங்கில் உள்ள தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த ஆடவர் ஒருவரைச் சாலையில் சென்றுக் கொண்டிருந்த மாடு திடீரென முட்டி முரட்டுத்தனமாகத் தாக்கியதால் அருகிலுள்ள ஆற்றில் விழுந்ததாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட 53 வயது ஆடவரைத் தோட்டத் தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பாதிக்கப்பட்டவர் உயிரிந்ததாகவும் Hulu Selangor, மாவட்டக் காவல் ஆணையர் Ibrahim Husin தெரிவித்தார்.
சம்பவத்தின் போது அவருக்கு முதலுதவிகள் வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு உயிர் இருந்ததாகவும் ஆற்றில் விழுந்த போது தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அவர் உயிரிழந்ததாகவும் மருத்துப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக Hulu Selangor, மாவட்டக் காவல் ஆணையர் Ibrahim Husin தெரிவித்தார். தோட்டத்தின் உரிமையாளருக்குச் சொந்தமான மாடு என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் மாட்டின் உரிமையாளரிடம் காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருவதாக Hulu Selangor, மாவட்டக் காவல் ஆணையர் Ibrahim Husin தெரிவித்தார்.
Seorang lelaki berusia 53 tahun maut selepas dirempuh seekor lembu ketika menunggang motosikal ke ladang di Kerling. Mangsa terjatuh ke sungai dan meninggal akibat kecederaan parah di kepala. Polis menyiasat pemilik lembu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



