விபத்தை ஏற்படுத்தினால் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து! – JPJ அதிரடி!

top-news

ஜூலை 7,


பொது போக்குவரத்து அல்லது வணிக வாகனங்கள் விபத்தில் சிக்கினாலோ அல்லது விபத்தை ஏற்படுத்தினாலோ அவர்களின் ஓட்டுநர் உரிமத்தைத் தடை செய்வவிருப்பதாகத் தேசிய போக்குவரத்து ஆணையத்தின் JPJ இயக்குநர் Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார். விபத்தில் சம்மந்தப்பட்ட வாகனங்களின் ஓட்டுநர்கள் விசாரணை முடியும் வரையில் அவர்களின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுமென Datuk Aedy Fadly Ramli வலியுறுத்தினார்.

விசாரணை காலம் முடியும் வரையில் ஓட்டுநர்கள் எந்த வகையான வாகனங்களைச் செலுத்தவும் தடைவிதிக்கப்படும் என்றும் விசாரணைக்குப் பின்னர் வழங்கப்படும் நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஏற்ப ஓட்டுநர் உருமம் நிரந்தரமாகவோ கால அளவிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார். இந்த அறிவிப்பின் மூலமாக வாகனமோட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனத்தைச் செலுத்துவார்கள் என தாம் நம்புவதாக Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார்.


JPJ akan membatalkan lesen memandu pemandu kenderaan awam atau komersial yang terlibat atau menyebabkan kemalangan. Lesen akan digantung sementara hingga siasatan selesai dan boleh dibatalkan kekal bergantung keputusan mahkamah, kata Datuk Aedy Fadly Ramli.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *