பட்டாசு கடை வெடிப்பு – அனுமதி ரத்து நடவடிக்கை
- Surendran Sumdraraj
- 23 Mar, 2026
நிபோங் தெபால், மார்ச் 23-
தாமான் பெகாகா பகுதியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்து சம்பவத்தில் தொடர்புடைய பட்டாசு கடையின் அனுமதியை செபராங் பெராய் மாநகராட்சி (MBSP) உடனடியாக ரத்து செய்துள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, இதே போன்ற வணிக வளாகங்களின் மீதான கண்காணிப்பை MBSP மேலும் வலுப்படுத்தியுள்ளது. அதேசமயம், இனி இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு நிபந்தனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
MBSP மேயர் டத்தோ பட்ருல் அமின் அப்துல் ஹமிட் தெரிவித்ததாவது, சம்பவம் குறித்து மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைக்கு வழங்கப்பட்ட அனுமதி உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும், அருகிலுள்ள பிற பட்டாசு கடைகளிலும் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
“இந்த சம்பவத்தை நாங்கள் மிகவும் கவனமாக எடுத்துக்கொள்கிறோம். பொதுமக்களின் பாதுகாப்பே எங்கள் முதல் முன்னுரிமை. அதற்காக கண்காணிப்பும் சட்ட அமலாக்கமும் மேலும் கடுமையாக்கப்படும்,” என அவர் கூறினார்.
இந்த நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில் MBSP தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
KV Nathan
சம்பவம் நடந்த பிறகு உரிமத்தை உடனடி ரத்து செய்து என்ன செய்வது. உரிமம் கொடுக்கும் முன்பும் பின்பும் சரியான கண்கானிப்பு இல்லாமையே காரணம்.



