ஈரானுக்கு செல்லும் விமானங்கள் ரத்து.. உச்சக்கட்ட பதற்றத்தில் மத்திய கிழக்கு!

top-news
FREE WEBSITE AD

ஈரான் மீது, அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்கிற சூழல் உருவாகியிருக்கிறது.
இப்படி இருக்கையில், துருக்கியிலிருந்து, ஈரான் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்குச் செல்லவிருந்த விமானங்கள் வெள்ளிக்கிழமை இரவு ரத்து செய்யப்பட்டன. துருக்கி ஏர்லைன்ஸ் மற்றும் இரண்டு ஈரானிய விமான நிறுவனங்களின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக இஸ்தான்புல் விமான நிலையம் அறிவித்தது.

சனிக்கிழமைக்கான இன்று 4 தெஹ்ரான் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. எனினும், மேலும் 6 தெஹ்ரான் விமானங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. வட ஈரானில் உள்ள தப்ரிஸ் நகரத்துக்குச் செல்லவிருந்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானமும்  ரத்து செய்யப்படலாம் என அறிவிகிக்கப்பட்டிருக்கிறது.

ஈரானில் என்ன நடந்தது என்பது குறித்து துருக்கி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை எந்தக் கருத்தையும் கூறவில்லை. இஸ்லாமியக் குடியரசான ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என எச்சரித்த நாடுகளுடன் இணைந்து கொள்ளவும் அவர்கள் மறுத்துவிட்டனர். துருக்கி, 550 கிலோமீட்டர் (340 மைல்) நீளமுள்ள ஈரானின் எல்லையை 3 முக்கிய கடக்கும் வழிகளுடன் பகிர்ந்து கொள்கிறது.

சமீபத்தில் ஈரானுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் பேசியிருந்தார். அதில், ஈரானுடன் நடந்த உரையாடலில் திருப்தி இல்லை. இந்த உரையாடல் என்னை மகிழ்ச்சியடைய வைக்கவில்லை என்று கூறியிருந்தார். தற்போது ஈரானை சுற்றி அமெரிக்காவின் 2 சக்தி வாய்ந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்களும், அதற்கு சப்போர்ட்டாக சிறிய தாக்குதல் கப்பல்களும் இருக்கின்றன.

அதேபோல இஸ்ரேலில் அமெரிக்காவின் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது அமெரிககா தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *