4 சகோதரர்கள் உட்பட ஐவர் விபத்தில் பலி! மூவர் படுகாயம்!

top-news

ஜூன் 7,

ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இரு வாகனங்களில் பயணிந்த போது விபத்துக்குள்ளானதில் இரு வாகனங்களிலிருந்த ஐவர் உயிரிழந்ததுடன் முவர் படுகாயம் அடைந்தனர். இன்று அதிகாலை 12.39 மணிக்கு ஜெராண்டூட்டிலிருந்து மாரான் செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாகப் பகாங் மாநில மீட்பு ஆணைய இயக்குநர் MOHD RAZAM TAJA RAHIM தெரிவித்தார். 

PERODUA BEZZA வாகனத்திலிருந்த 17 முதல் 26 வயதுள்ள ஐவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் TOYOTA ALPHARD வாகனத்திலிருந்த 28 வயது இளம்பெண் உட்பட மூவர் படுகாயம் அடைந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகப் பகாங் மாநில மீட்பு ஆணைய இயக்குநர் MOHD RAZAM TAJA RAHIM தெரிவித்தார். விபத்துக்குள்ளான இரு வாகனங்களிலிருந்த இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ள நிலையில் விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lima ahli keluarga termasuk empat adik-beradik maut dalam kemalangan tragis melibatkan dua kenderaan di jalan dari Jerantut ke Maran. Kemalangan berlaku sekitar jam 12.39 pagi dan turut menyebabkan tiga individu cedera. Semua mangsa menaiki dua kenderaan dan dikenal pasti sebagai ahli keluarga yang sama. Pihak polis masih menyiasat punca kemalangan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *