5 வாகனங்கள் விபத்து! மூவர் பலி!

- Sangeetha K Loganathan
- 28 Mar, 2025
மார்ச் 28,
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் கூலாய் அருகில் 5 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் மூவர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Treler லாரி, Honda , Proton X50, Toyota Camry ஆகிய வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக இரவு 11.48 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதும் 13 மீட்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூலாய் மாவட்ட மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Nizar Mamun தெரிவித்தார்.
Honda வாகனத்திலிருந்த ஓட்டுநரும் 4 பெண்களும் 2 குழந்தைகளும் Toyota Camry வாகனத்திலிருந்த மூவரும், Proton x50 வாகனத்திலிருந்த தம்பதியரும் Treler லாரி ஓட்டுநரும் படுகாயம் அடைந்த நிலையில் மூவர் பலியானதாக நம்பப்படுகிறது. விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூலாய் மாவட்ட மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Nizar Mamun தெரிவித்தார்.
Kejadian kemalangan membabitkan lima kenderaan berhampiran Kulai di Lebuhraya Utara-Selatan mengorbankan tiga nyawa. Kenderaan yang terlibat termasuk treler, Honda, Proton X50, dan Toyota Camry. Mangsa cedera kini menerima rawatan, sementara pihak berkuasa menyiasat punca kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *